இன்று வடக்கு லண்டனின் பள்ளிவாசல் ஒன்றிலிருந்து ரமழான் தொழுகை முடித்துவிட்டு வெளியில் பாதசாரி கடவையில் வந்து கொண்டிருந்த முஸ்லீம்கள் மீது கண்மூடித்தனமாக வாகனம் ஒன்றில் வந்து நபர் ஒருவர் மோதியதில், ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இங்கிலாந்தின் மிகப்பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றான ஃபயின்ஸ்புரி பூங்கா பள்ளிவாசல் அருகிலேயே இத்தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதல் நடத்திய நபர் மன நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும், அவர் வாகனத்துடன் மோதி தாக்குதல் நடத்திய போது «அனைத்து முஸ்லீம்களை கொல்லுவேன்» என சூளுரைத்ததாகவும் சாட்சிகள் தெரிவிக்கின்றன.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் லண்டன் பிரிட்ஜ் அருகில், மூன்று இஸ்லாமிய தீவிரக் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Monday, June 19, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment