“இனவாதத்தைத் தூண்டும் நோக்கில் செயற்படும் காவியுடை தரித்த மத அடிப்படைவாதிகளை நான் பௌத்த பிக்குள் என்று அழைப்பதில்லை.” என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். காலியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ நாட்டில் காவியுடை தரித்த சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் இனவாத மதவாத அடிப்படையிலேயே செயற்படுகின்றார்கள். அவ்வாறான நபர்களை நான் பௌத்த பிக்குகள் என கூறுவதில்லை. காவி உடை தரித்தால் கௌதம புத்தரின் கொள்கைகளை பின்பற்றி அதன் வழி நடக்க வேண்டும். அதனை எமக்கு சொல்லி கொடுக்க வேண்டும். எனினும் சில பௌத்த பிக்குகள் கொலை செய்யவும், பொறமை கொள்ளவும், குரோத உணர்வுடன் வாழவும் கற்றுக்கொடுக்கின்றார்கள்.
ஒருசில பௌத்த பிக்குகள் மதக் கொள்கைகளுக்கு முற்றிலும் புறம்பான காரியங்களை செய்கின்றார்கள். யாழ்ப்பாணத்திலும் இவ்வாறான கடும்போக்காளர்கள் இருந்தார்கள். இதனால் யாழ்ப்பாண மக்களுக்கு அழிவுகள் ஏற்பட்டன. இனவாத அடிப்படையில் போர் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் மதவாத அடிப்படையில் செயற்பட சிலர் முயற்சிக்கின்றார்கள்.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
இனவாதத்தைத் தூண்டும் காவியுடை தரித்தவர்கள் பௌத்த பிக்குகள் அல்ல: சந்திரிக்கா குமாரதுங்க
Monday, June 12, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment