தமிழக அரசினால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ‘மே 17 இயக்கத்தின்’ ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்யக் கோரி யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று வியாழக்கிழமை காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.
Thursday, June 8, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment