அதிமுகவிலிருந்து தன்னை நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மாத்திரமே உண்டு என்று அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என்று கூறப்படும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையகத்துக்கு ரூ.50 கோடி இலஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி ல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த இலஞ்சப்புகார் விவகாரம் வெளியானதும், அ.தி.மு.க.(அம்மா) அணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, கட்சியில் இருந்து ஒதுங்குவதாக டிடிவி தினகரன் அறிவித்தார்.
இந்த நிலையில், டிடிவி தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்து டெல்லி தனி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 34 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு டெல்லி திகார் சிறையில் இருந்து விடுதலையாகி டிடிவி தினகரன் வெளியே வந்தார்.
அதனையடுத்து, நேற்று சனிக்கிழமை சென்னை வந்தார். சென்னை வந்த அவரிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போதே, “அதிமுகவிலிருந்து என்னை நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மாத்திரமே உண்டு.” என்று தெரிவித்துள்ளார்.
Home
»
Tamizhagam
»
என்னை அதிமுகவிலிருந்து நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மாத்திரமே உண்டு: டிடிவி தினகரன்
Sunday, June 4, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment