அரபு நாடுகளில் அதிக எரிவாயு வளம் கொண்ட நாடுகளில் கத்தார் நாடும் ஒன்று. இந்த நாட்டுடன் அரபு நாடுகளான சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, அமீரகம், ஏமன் ஆகிய 5 நாடுகள் தூதரக உறவை துண்டிப்பதாக அறிவித்தன. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு கத்தார் மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக குற்றம் சாட்டி இந்த நடவடிக்கையை 5 அரபு நாடுகள் மேற்கொண்டுள்ளன.
தூதரக உறவு துண்டிக்கப்பட்டதால் அந்த நாடுகள் கத்தாருடன் தங்களது விமான சேவைகள் மற்றும் கப்பல் சேவைகளையும் ரத்து செய்தது. கத்தார் விமானங்கள் தங்களது வான் எல்லையில் பறக்கவும் தடை விதித்துள்ளது. மேலும் கத்தாரில் உள்ள தங்கள் நாட்டின் தூதரக அதிகாரிகளை உடனடியாக திரும்ப அழைத்துக் கொண்டது. இதனால் கத்தார் நாட்டுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கத்தார் பயங்கரவாதத்திற்கு உதவி செய்வதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துவிட்டது. இப்போது அந்நாட்டிற்கு தேவையான உணவு பொருட்களை ஈரான் அனுப்பி வருகிறது. இவ்விவகாரத்தில் துருக்கி மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் கத்தாருக்கு ஆதரவாக உள்ளன. ஈரானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா மீது தன்னுடைய காட்டத்தை வெளிக்காட்டியது.
இவ்விவகாரத்தில் அமெரிக்காவிற்கு சரமாரியாக வேள்விகளை ஈரான் முன்வைத்து உள்ளது. இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் நிலையில்லா தன்மைக்கு அமெரிக்காதான் காரணம் என்று ஈரான் தலைவர் அயோதுல்லா அலி காமெனி கடுமையாக விமர்சித்துள்ளார். "அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளே மத்திய கிழக்கு நாடுகளின் ஸ்திரமின்மைக்கு காரணம். அவர்கள் குழப்பம் விளைவிக்கிறார்கள். அமெரிக்காவிடம் எனக்கு ஒரு கேள்வி உள்ளது.
ஐஎஸ் இயக்கத்தை உருவாக்கியது யார்? அமெரிக்காதான். ஐஎஸ் இயக்கத்துக்கு எதிராக சண்டையிடுவதாக அமெரிக்கா கூறுவது முற்றிலும் பொய்யானது என ஈரான் அரசின் அதிகாரபூர்வ இணைய பக்கத்தில் அந்நாட்டின் தலைவர் அயோதுல்லா அலி காமெனி கூறிஉள்ளார். ஈரான் நாட்டின் உயர்மட்ட தலைவர்கள் கூட்டத்தில் பேசிய போது அயோதுல்லா அலி காமெனி இவ்வாறு பேசியதாக அந்நாட்டு அரசு இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
அமெரிக்காவுடன் இணைவோம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. அமெரிக்கா சுதந்திர ஈரானுக்கு எதிரானது. அமெரிக்காவுடன் உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்பட முடியாதவை. அமெரிக்கா ஒரு பயங்கரவாத நாடு. அமெரிக்கா பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு. இதுபோன்று பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாட்டுடன் எங்களால் நட்புறவு வைத்துக் கொள்ள முடியாது எனவும் அயோதுல்லா அலி காமெனி பேசிஉள்ளார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Wednesday, June 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment