ஒரு படத்தை ஒருவர் வாங்குவது. அதை இன்னொருவருக்கு பல கோடிகள் எக்ஸ்ட்ரா வைத்து விற்பது. வாங்கியவர் மேலும் பல மடங்கு லாபத்துடன் விநியோகஸ்தர் தலையில் கட்டுவது என்கிற கைமாற்று வித்தைகளுக்கு லாடம் அடித்துவிட்டது விநியோகஸ்தர் கூட்டமைப்பு.
இதன்படி அந்தந்த ஏரியாவிலிருக்கும் விநியோகஸ்தர்களுக்கு துண்டு துண்டாகதான் படத்தை விற்றாக வேண்டும்.
இந்த முறை அமலுக்கு வந்தால், ரஜினி கமல் அஜீத் விஜய் படங்களுக்கு மட்டுமல்ல... சந்தானம் ரேஞ்ச் ஹீரோக்களுக்கு கூட செம லாஸ் வரும் என்கிறார்கள்.
அதே நேரத்தில் இன்னொரு சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. ஐந்து கோடிக்கு குறைவாக தயாரிக்கப்படும் படத்திற்கு மட்டும் விதிவிலக்கு.
முன்பெல்லாம் இரண்டு கோடிக்கு எடுக்கப்பட்ட படத்தை கூட பெரும் பொருட்செலவில் என்று விளம்பரப்படுத்துவார்கள்.
இப்போது ஐந்து கோடிக்கு அதிகமாக எடுக்கப்பட்ட படத்தை கூட, அதுக்கு கம்மிதான் என்று சொல்லி மொத்த கொள்முதலுக்கு குறுக்கு வழி போடுகிறார்கள் சிலர்.
அமீபா மாதிரி அப்பப்போ மாறிக்கறதுதான் சினிமா.
Friday, June 2, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment