முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவமே தொடர்ந்தும் தடையாக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். குறித்த காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ள போதிலும், அதற்கு இராணுவம் தடையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பூர்வீக கிராம மக்களின் காணி விடுவிப்பு கோரிய அறவழிப் போராட்டம் இன்று புதன்கிழமையுடன் 99 நாட்களை எட்டியுள்ளது. இந்நிலையில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஊடாக அம்மக்களுக்கு வடக்கு மாகாண முதலமைசச்ர் அனுப்பிவைத்துள்ள செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உண்ணாவிரதத்தில் அல்லது வேறு ஏதாவது கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் மக்கள் மீது இராணுவம் பரிவு காட்டும் என எதிர்பார்க்க முடியாது. எனவே, மக்களை அவ்வாறான பொருந்தாத செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Wednesday, June 7, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment