மூன்று வருடங்களாக காதலித்து விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்கும்படி இளம்பெண் ஆட்சியர் அலுவலகத்துக்கு கண்ணகியை போல கையில் சிலம்போடு நீதி கேட்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்தவர் ஸ்டெல்லா பேபி என்கிற கோமதி. இவர் நேற்று மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு சிலம்போடு வந்து தன்னை ஏமாற்றிய காதலன் மீது புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோமதி, மூன்று வருடங்களுக்கு முன்னர் கார்த்திக் என்பருடன் எனக்கு காதல் ஏற்பட்டது.
அவருடன் திருமணம் செய்வது குறித்து நான் கேட்டதற்கு, தன் அக்காவுக்கு திருமணம் முடிந்ததும் நாம் செய்து கொள்ளலாம் என்று சொல்லி என்னிடம் நெருங்கிப் பழகினார்.
இதனால் நான் இரண்டு முறை கர்ப்பமானேன், அவர் கட்டாயப்படுத்தியதால் கருவை கலைத்தேன்.
இப்போது என்னால் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது, முடிந்ததை பார்த்துக் கொள் என கூறிவிட்டு சென்றுவிட்டார்.
என் தாய் இறந்துவிட்டார், தந்தையும் படுத்தபடுக்கையாக உள்ளார். இதனால் ஆதரவின்றி நான் அனாதையாக நிற்கிறேன்.
சில மாதங்களுக்கு முன்னர் பொலிசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதனால் தான் கண்ணகி நீதி கேட்டது போல சிலம்புடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தேன் என கோமதி கூறியுள்ளார்.
Friday, June 9, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment