2009 ஆம் ஆண்டு சீனாவில் ஜனநாயகம் தொடர்பான சார்ட்டெர் 8 என்ற நூலை வெளியிட்ட காரணத்துக்காக சீனக் குடிமகனான லியு சியாபோ என்பவருக்கு 11 வருட சிறைத் தண்டனை அளித்திருந்தது சீன அரசு.
அடுத்த வருடம் அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசை அளித்துக் கௌரவித்தது நோர்வேயின் நோபல் கமிட்டி. இதனால் சீனாவுக்கும் நோர்வேக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு 6 வருடங்கள் கழித்து இந்த வருடம் ஏப்பிரல் மாதம் தான் வழமைக்குத் திரும்பி இருந்தது.
இந்நிலையில் ஈரல் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற வேண்டிய தேவை ஏற்பட்டதால் மருத்துவ நோக்கம் கருதிய பரோலில் லியு சியாபோ விடுவிக்கப் பட்டதாக திங்கட்கிழமை அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். லியுவுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலமை சீனாவிலுள்ள மனித உரிமைகள் ஆர்வலர்களைக் கடும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது.
சீனாவின் ஷென்யாங் நகரிலுள்ள முதல் தர மருத்துவப் பல்கலைக் கழகத்தில் தற்போது லியு சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் மே 23 சிகிச்சை ஆரம்பிக்கப் பட்டதாகவும் அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். லியுவுக்கு ஈரல் புற்று நோய் முற்றிய கட்டத்தில் இருப்பதாகவும் தெரிய வருகின்றது.
Monday, June 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment