இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் , ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கும் படம் "இவன் தந்திரன்". இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குனர் பாக்கியராஜ், டி . சிவா, ஆர்யா, கலைப்புலி எஸ். தாணு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்டு பேசிய டி . சிவா, தென்னிந்திய சினிமாவின் நிலை மிக மோசமாக போய்க் கொண்டிருப்பதாகவும், தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் அனாதையான நிலையில் இருக்கிறார்கள் என்றும் ஆதங்கத்துடன் தெரிவித்தார். தற்போது ஜி எஸ் டி வரி 28% இல் இருந்து 18% சதவீதமாக மாற்றியுள்ளது மனதிற்கு ஆறுதல் தருகிறது என்றும் அவர் அங்கு குறிப்பிட்டார்.
இதற்கிடையே "Censor Board" பல கட்டுப்பாடுகளை கொண்டுவந்து தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும் பெரிய கஷ்டத்திற்குள் தள்ளுகிறது. ஆறு மாதத்திற்கு முன்பு ஒரு படத்திற்கு டிவி விளம்பரம் ரூ.40 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்தேன். தற்போது அதே கால அவகாசம் உள்ள படத்திற்கு டிவி விளம்பரம் எவ்வளவு என்று கேட்டால் ரூ.85 லட்சம் என்கிறார்கள். ஆறு மாதத்திற்குள் அனைத்து விளம்பரக் கட்டணங்களும் இரண்டல்ல, மூன்று மடங்கை விட அதிகரித்துள்ளன.
தமிழ் சினிமா அனாதையாக நிற்கும் இந்த நிலையில் ரஜினி இந்த பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். ரஜினி சொன்னால் மட்டுமே மத்திய அரசு அதற்கு கட்டுப்படும். இன்னும் ரஜினி அமைதியாக இருந்து காலம் தாழ்த்தக் கூடாது என்று டி . சிவா வேண்டுகோள் விடுத்தார்.
Wednesday, June 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment