வெள்ளைப்படுதல் (Leucorrhea) பிரச்சனையானது சிறிய வயது பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் ஏற்படுகிறது.
அதிலும் குறிப்பாக 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு தான் அதிகமாக உள்ளது.
சில நேரத்தில் இப்பிரச்சனைகள் பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் அதிக நமைச்சல் மற்றும் துர்நாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.
வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்பட காரணம் என்ன?
தவறான உணவு பழக்க முறைகள், சுகாதாரமற்ற உள்ளாடைகளை அணிவது, சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தல், மாதவிடாய் தூண்டும் மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக் கொள்வது போன்ற காரணத்தினால் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படுகிறது.
ஊளைச்சதை, ரத்த சோகை பிரச்சனை, உடல் உஷ்ணம், உடலுறவில் அதிகமாக ஈடுபடுதல், சுய இன்பம் காணுதல், அதிகப்படியான மன உளைச்சல், தூக்கமின்மை கல்லீரல் பாதிப்பு மற்றும் பூஞ்சை நோய் தொற்றுக்கள் போன்ற பிரச்சனைகளாலும் ஏற்படுகிறது.
தவிர்க்க வேண்டியவை?
உடலை எப்போதும் நன்கு சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.
உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
தினமும் சத்துக்காள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மசாலா பொருட்கள், காபி, டீ, புளி ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
மாமிச உணவு வகைகள் மற்றும் கத்தரிக்காய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
சாப்பிட வேண்டிய உணவுகள்?
உணவில் கீரைகள் அதிகம் சாப்பிட வேண்டும். உணவில் உப்பு, காரம் குறைவாக சேர்த்து சாப்பிட வேண்டும்.
தினமும் உணவு பழக்கத்தில் எளிதில் ஜீரணமாகக் கூடிய பழங்களை சாப்பிட வேண்டும்.
இளநீர், கீரை, தயிர், மோர் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் அன்னாசிப்பழம் மற்றும் பப்பாளிக் காயை இடித்து சாறு எடுத்து சாப்பிட வேண்டும்.
வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கான தீர்வுகள்?
சப்ஜா விதையை பொடி செய்து, அதில் ஒரு ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து சாப்பிடலாம்.
வல்லாரை கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, அதை ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிடலாம்.
அருகம்புல் 2 கைப்பிடி, கீழாநெல்லி 1 கைப்பிடி எடுத்து நன்கு அரைத்து அதை எருமைத் தயிரில் சேர்த்து சாப்பிடலாம்.
செம்பருத்தி பூ இரண்டு, சிறு துண்டு வெண்பூசணி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.
நல்லெண்ணெயுடன், முட்டையை கலந்து குடித்தால், மாதவிலக்கு பிரச்சினைகள் தீரும்.
புளியம்பழத்தோல், முருங்கைக்காய், சுக்கு ஆகிய மூன்றையும் சேர்த்து கஷாயம் செய்து குடிக்கலாம்.
மாம்பழத்தின் கொட்டையை காயவைத்து பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
கொள்ளு போட்டு வேகவைத்த நீரை குடித்து வந்தால், மாதவிலக்கு பிரச்சனையை தடுக்கலாம்.
பேரீச்சம்பழம், கொத்தமல்லி இலை ஆகிய இரண்டையும் அரைத்து, அதை பசும்பாலுடன் கலந்து கொதிக்க வைத்து குடித்தால் கர்ப்பம் தரிக்கும்.
உளுத்தம் பருப்பை நெய்யில் வறுத்து, பொடியாக்கி, பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உயிரணு உற்பத்தி அதிகரிக்கும்.
Saturday, June 24, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment