நீதிமன்றத்தை அவமதித்தாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இதற்கமைய, குறித்த வழக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, ஞானசார தேரர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
Home
»
Sri Lanka
»
நீதிமன்ற அவமதிப்பு வழங்கில் தேடப்படும் ஞானசார தேரர் வைத்தியசாலையிலாம்; சட்டத்தரணி தெரிவிப்பு!
Thursday, June 1, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment