“காணாமற்போனோர் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உண்டு. இனியும் அந்தப் பொறுப்பினை தட்டிக்கழித்துச் செல்ல முடியாது” என்று காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
காணாமற்போனோர் தொடர்பிலான தனிப்பணியகத்துக்கு தன்னால் ஏதாவது உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அவற்றை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம், தமது ஆணைக்குழுவின் காலத்தினை நீடிப்பதற்கு முடியாமல் போயுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
காணாமற்போனோர் தனிப்பணியகம் தொடர்பிலான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே மக்ஸ்வெல் பரணகம மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Home
»
Sri Lanka
»
காணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு: மக்ஸ்வெல் பரணகம
Tuesday, June 27, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment