Thursday, June 1, 2017

குஜராத்தி பெண்ணான நிகிஷா பட்டேல் தற்போது முன்னணி தென்னிந்திய நடிகையாக வளம் வருகிறார். அவர் முதலில் அறிமுகமானது 2010-ஆம் ஆண்டு தெலுங்கில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்து வெளிவந்த "புலி" படத்தில்தான். பிறகு தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற பிறமொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

தற்போது தமிழில் வெளிவர இருக்கும் "7 நாட்கள்" என்ற படத்தில் நடித்துள்ளார் நிகிஷா பட்டேல்.
"7 நாட்கள்" படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

எந்த மொழியில் உங்களுக்கு சிறந்த கதாபாத்திரங்கள் அமைந்திருக்கிறது?

தெலுங்கில் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்திருக்கிறது. தமிழில் முக்கியத்துவம் உள்ள குடும்பப் பெண்ணான கதாபாத்திரங்களிலும், கன்னடத்தில் கிராமப் பெண்ணான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன்.

இந்திய சினிமாவில் யார் வசீகரமான நடிகர்?

என்னைப் பொறுத்தவரை தமிழில் அஜித், தெலுங்கில் ஜூனியர் என் டி ஆர். இருவருடைய தோற்றங்களும் கவர்ச்சிகரமாக இருக்கும்.

காதல் காட்சிகளில் நடிப்பது சுலபமாக இருக்கிறதா?

நான் தோற்றத்தைப் பார்த்து நடிக்க மாட்டேன், கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பேன்.

நிகிஷா பட்டேல், பல பிபிசி நிகழ்ச்சிகளில் பணிபுரிந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer