மாடுகளை இறைச்சிக்காக விற்கவும் வாங்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கேரள முதல்வர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அண்மையில் கடிதம் எழுதி உள்ளார். மேலும் இது தொடர்பாக விவாதம் நடந்த அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுத்து அவர் கடிதம் எழுதி உள்ளார்.
இந்நிலையில் கேரள மந்திரிசபை கூட்டத்தை நேற்று புதன்கிழமை கூட்டிய பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினார். மேலும் எதிர்க்கட்சியினருடனும் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு விதித்த தடை உத்தரவு ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. இது தொடர்பாக விவாதம் நடத்த அனைத்து மாநில முதல்வர்களையும் திரட்ட அவர்களுக்கு நான் கடிதம் எழுதி உள்ளேன். அதில், நாம் ஒருங்கிணைந்து மத்திய அரசின் இந்த உத்தரவை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வரும் காலங்களில் இதே போன்று ஜனநாயகத்துக்கு எதிரான உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்க நேரிடும். எனவே இது குறித்து விவாதிக்க உரிய தேதியை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
அத்தோடு, மத்திய அரசின் உத்தரவை எதிர்த்த சட்டரீதியாகவும் நாங்கள் அணுக உள்ளோம். இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து கேரள ஐகோர்ட்டு அல்லது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர இருக்கிறோம். மேலும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தையும் கூட்ட உள்ளோம்.” என்றுள்ளார்.
Home
»
India
»
மத்திய அரசுக்கு எதிராக அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்துக்கு கேரள முதல்வர் அழைப்பு!
Thursday, June 1, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment