பிரித்தானியாவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறுவதற்கு ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தவறியுள்ளது. இதனால், தொங்கு பாராளுமன்றத்துக்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 650 தொகுதிகளில், இதுவரை 642 தொகுகளில் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்பிரகாரம், கன்சர்வேட்டிவ் கட்சி 313 ஆசனங்களையும், பிரதான எதிர்க்கட்சியான லேபர் கட்சி (தொழிற்கட்சி) 260 ஆசனங்களையும் வெற்றுள்ளன. ஏனைய கட்சிகளுக்கிடையிலும் ஆசனங்கள் பகிரப்பட்டுள்ளன. இன்னும் 8 தொகுதிகளில் முடிவுகளே வெளியாகவேண்டியுள்ளன. இதனால், பெரும்பான்மையப் பெறுவதற்குத் தேவையான 326 ஆசனங்கள் என்கிற இலக்கை கன்சர்வேட்டிவ் கட்சி அடைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
எனினும், ஏனைய சிறிய கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தி ஆதரவினைப் பெற்றுக் கொண்டு கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியை தொர்ந்து நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், தேர்தலை முன்னதாகவே நடத்த பிரதமர் திரேசா மே எடுத்த முடிவு தோல்விகரமானது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
Home
»
World News
»
பிரித்தானியாவில் தொங்கு பாராளுமன்றம்; பிரதமர் திரேசா மேயின் முடிவுக்கு பின்னடைவு!
Saturday, June 10, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment