Wednesday, June 14, 2017

"Jhony LLB" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அக்‌ஷய் குமார் நடித்து வெளிவர இருக்கும் படம் Toilet - ஏக் பிரேம் கதா. அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

"Toilet - Ek Prem Katha", கேசவ் (அக்‌ஷய் குமார்) என்கிற எளிய மனிதருக்கும், ஜெயா (பூமி பட்னேகர்) என்கிற முற்போக்கு சிந்தனை உள்ள பெண்ணிற்கும் இடையே நடக்கும் நகைச்சுவை கலந்த காதலை படமாக்கி உள்ளனர். இப்படத்தில் திறந்த வெளியில் மலம் கழிப்பதைப் பற்றியும், சுகாதாரத்துறையின் அலட்சியத்தைப் பற்றியும் சமூகக் கருத்தோடு படமாக்கியுள்ளனர்.

"டாய்லெட்" படத்தின் ட்ரைலரைப் பார்த்து பாரத பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பாராட்டியுள்ளார். இது ஒட்டுமொத்த டாய்லெட் படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் படத்தின் ட்ரைலரை பிரதமர் மோடி ரீட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது. படத்தைப் பற்றி அவர் கூறுகையில் நாட்டின் சுத்தத்தைப் பற்றி மக்களுக்கு தெரிவிப்பது நல்ல முயற்சி என்றும், 125 கோடி மக்களும் ஒன்றிணைந்து 'swachh bharat' உருவாக்குவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று, தமிழில் 2016 ஆகஸ்ட் மாதம் வெளியான "ஜோக்கர்" படம் திறந்த வெளியில் மலம் கழிப்பதையும், மாநில மற்றும் தேசிய அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் சுட்டிக்காட்டி ஜனரஞ்சகமாக எடுத்திருந்தார் இயக்குனர் ராஜுமுருகன். "ஜோக்கர்" தேசிய விருது பெற்ற சிறந்த தமிழ்ப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer