“மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் போயஸ் தோட்டம் இல்லம் எனக்கும், என்னுடைய சகோதரி தீபாவுக்கும் சொந்தமானது“ என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபக் தெரிவித்துள்ளார். அத்தோடு, போயஸ் தோட்டம் இல்லத்துக்கு விஜயம் செய்த தீபாவை யாரும் தடுத்து நிறுத்தவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்த இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், ‘என்னையும் தீபாவையும் யாரும் தடுக்க முடியாது. சகோதரி தீபாவை நான் தான் போயஸ் தோட்டம் இல்லத்துக்கு அழைத்தேன். அதன் பேரிலேயே தீபா போயஸ் தோட்டத்துக்கு இன்று காலை வருகை தந்தார். பின்னர் அவர் ஜெயலலிதாவின் ஒளிப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.” என்றுள்ளார்.
போயஸ் தோட்டம் இல்லத்திற்கு இன்று காலை விஜயம் செய்த தீபா, போயஸ் தோட்டம் இல்லத்தை உரிமை கோரியதாகவும், ஆனால் அவருக்கு உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே தீபக் விளக்கமளித்துள்ளார்.
Home
»
Tamizhagam
»
போயஸ் தோட்டம் இல்லம் எனக்கும் தீபாவுக்கும் சொந்தமானது; ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்!
Sunday, June 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment