தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா,கார்த்தி ஆகிய இருவருமே முன்னணி நடிகர்களாக இருந்து வரும் நிலையில், இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையாக இருந்து வருகிறது. தற்போது சூர்யா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திலும், நடிகர் கார்த்தி வினோத் இயக்கத்தில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்திலும் பரபரப்பாக நடித்து வரும் நிலையில், இருவரும் தற்போது ஒரே படத்தில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அதாவது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் ஒரு படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என தெரிகிறது. 2D நிறுவனத்தின் தயாரிப்பில் ஏற்கனவே 'பசங்க 2' படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Wednesday, June 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment