சிரியாவில் கிளர்ச்ச்சியாளர்களை அடக்குவதற்கான போரில் அப்பாவிப் பொது மக்கள் மீது அந்நாட்டின் அதிபர் பஷார் அல் அசாத் தலைமையிலான அரசு மீண்டும் இரசாயனத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டு வருவதாகவும் இதைக் கடுமையாக எச்சரிப்பதுடன் மீறி செயற்பட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா அறிக்கை விடுத்துள்ளது.
6 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் சிரிய உள்நாட்டுப் போரில் கிளர்ச்சிப் படைக்கு ஆதரவாக அமெரிக்காவும் அதிபர் அசாத்தின் அரச படைகளுக்குச் சார்பாக ரஷ்யாவும் களத்தில் செயற்பட்டு வருகின்றன. இது தவிர சிரியாவின் பல பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள ISIS தீவிரவாதிகளும் அரசுக்கு எதிராகச் செயற்படுவதுடன் இக்குழுவை ஒழித்துக் கட்டுவதில் அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒருமித்த போக்கைக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சிரியாவில் ஏப்பிரல் மாதத்தில் சிரிய இராணுவம் பிரயோகித்த இரசாயனக் குண்டுகளால் நரம்பு மண்டலம் பாதிக்கப் பட்டு பல பொது மக்கள் உயிரிழந்து இருந்தனர். இதற்கு சர்வதேசத்திடம் இருந்து பாரிய எதிர்ப்பலைகள் கிளம்பி இருந்தன. இந்நிலையில் மீண்டும் ஒரு முறை சிரிய அரசு இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால் நிச்சயம் அதன் மீது பதிலடி கொடுக்கப் படும் என வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அண்மைக் காலமாக சிரிய உள்நாட்டுப் போரில் கிளர்ச்சியாளர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு வருவதாக சிரிய அரச தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Home
»
World News
»
சிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலுக்குத் திட்டம்: அமெரிக்கா எச்சரிக்கை
Tuesday, June 27, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment