கொழும்பு, மஹரகமவில் அடுத்தடுத்து நான்கு வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர், பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நாட்டின் சில பகுதிகளில், கடந்த சில நாட்களாக முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து, குறித்த நபரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த பொலிஸ் மா அதிபர், மஹரகம கடை எரிப்புச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர், பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளிலும் இன முறுகலையும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் சீர்குலைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்ற இவ்வாறான தனிநபர்கள் மற்றும் குழுவினர் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
Monday, June 12, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment