‘வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் வலது கையாக இருந்த என்னை வீழ்த்தினால், அவர்கள் நினைத்த எல்லாம் நடக்கும் என்கிற எண்ணத்தில் என்னை சதி செய்து வீழ்த்தியுள்ளனர்.’ என்று வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “முதலமைச்சர் தான் நியமித்த விசாரணைக்குழுவை அவர் நம்பினார். ஆனால் விசாரணைக்குழு எனது விடயத்தில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அது பக்கச்சார்பாக இயங்கியுள்ளது என்பது புலப்படுகின்றது. வடக்கு மாகாண முதலமைச்சரின் வலது கையை வெட்டினால் அவரை இலகுவாக வீழ்த்தலாம் என்ற எண்ணத்திலேயே அனைத்தும் இடம்பெற்றன.
அதுமட்டுமன்றி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பேரம் போகாத சுற்றுச்சூழல் அமைச்சரான என்னை எப்படியாவது பதவியில் இருந்து நீக்கவேண்டும் எனக் கொழும்பு அரசு விரும்பியது. வடக்கில் ஏற்பட்டுள்ள சதி தென்னிலங்கையில் இருந்தே தீட்டப்பட்டது என்பதை நான் ஏற்கனவே அறிந்து கொண்டிருந்தேன். அவ்விசாரணை அறிக்கையில் ஆவணங்கள் எவையும் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படவில்லை. ஆகவே ஆவணம் எதுவுமின்றியே விசாரணைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
யு.எஸ் உணவு விடுதியில் தீட்டப்பட்ட திட்டங்கள் தொடர்பில் எனக்கும் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் நாம் அதனை சாதாரண விடயமாக எடுத்துவிட்டோம். இலங்கையில் ஆயுதப் போராட்டத்தின் பின்னர் எமக்கான தலைவராக முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகிவிடக்கூடாது என்பதில் திட்டமிட்டே சதிகள் நடந்துள்ளன. மாகாண முதலமைச்சருக்கு எதிராக அவைத் தலைவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆளுநரிடம் கையளித்துள்ளார் என்றால் அவர், இனிவரும் காலங்களில் நடுநிலையாகச் செயற்படுவார் என்பதில் நம்பிக்கை இல்லை.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
முதலமைச்சரின் வலது கையை வெட்டினால் எல்லாம் நடக்கும் என்கிற எண்ணத்தில் என்னை சதி செய்து வீழ்த்தினர்: பொ.ஐங்கரநேசன்
Tuesday, June 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment