நாட்டிலேயே மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகம் பருத்தித்துறையில் அமைக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வடக்கு பிரதேசத்தில் கடற்றொழில் துறையை மேம்படுத்த முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி இதற்கான நிதியுதவியினை வழங்கி வருகின்றது. இது தொடர்பாக மொறட்டுவ பல்கலைக்கழகம் மேற்கொண்ட சாத்தியவள அறிக்கை தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னாரின் பேசாலையிலும் மீன்பிடித்துறைமுகம் அமைக்கப்படவுள்ளது. இன்னும் 20 மீன்பிடி இறங்குதுறைகளும் வள்ளங்களுக்கான 7 நங்கூரங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இதேபோன்று குளிருட்டி மற்றும் மீன்விநியோக மத்திய நிலையம் ஆகியனவும் ஏற்படுத்தப்படவுள்ளன. நீர் உயிர்வாழ் தொழிற்பேட்டையொன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்மூலம் 10ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
நாட்டின் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகம் பருத்தித்துறையில் அமைக்கப்படுகின்றது: மஹிந்த அமரவீர
Thursday, June 8, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment