கிரிக்கெட் வீரர் சச்சினின் வாழ்க்கை வரலாறு ‘சச்சின்’ என்ற பெயரிலேயே படமாகியிருக்கிறது. இந்த வார இறுதியில் உலகம் முழுக்க வெளியிடப்படும் இப்படத்திற்காக தானே நேரில் சென்று பல இடங்களிலும் பிரமோஷன் செய்து வருகிறார் சச்சின்.
பிரதமர் மோடியை கூட அவர் நேரில் சந்தித்த ஸ்டில்கள் வெளிவந்தன.
மும்பையில் ஒரு ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்து பிரபலங்களுக்கு போட்டுக் காட்டியும் இருக்கிறார்கள்.
இந்தி, தெலுங்கு, கர்நாடகா வரைக்கும் கூட இப்படத்திற்காக கொள்ளை கொள்ளையாக செலவு செய்து பப்ளிசிடி தரும் சச்சின் குழு, தமிழில் மட்டும் ‘தேமே’ என்று இருக்கிறது.
முன்பெல்லாம் தமிழன் என்றால் வடக்குதான் இடக்கு செய்யும்.
இப்போது தமிழ் தாங்கிய மொழி மாற்று படங்களுக்கு கூடவா? தமிழ்ல உங்க படம் ரன் அவுட் ஆனா மூச் விடக்கூடாது சச்சின்?
Thursday, June 1, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment