தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பல்வேறு அணிகளாக சிதறிக் கிடக்கின்றன. குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதம் ஓ.பன்னீர்செல்வம் போர் கொடி எழுப்பியப் பிறகு நடந்த அரசியல் திருப்பங்கள் அனைவரும் பார்த்ததுதான். சட்டமன்ற உறுப்பினர்கள் அணி மாறியது, கூவத்தூர் விடுதி, நம்பிக்கை வாக்கெடுப்பு, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி என்று கடந்த சில மாதங்களில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூர் விடுதியில் இருந்தபோது, அவர்களுக்கு பன்னீர்செல்வம் அணி மற்றும் சசிகலா அணி கோடிகளில் பேரம் பேசியதாக, 'டைம்ஸ் நவ்' ஆங்கில தொலைக்காட்சி ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. அதில், சசிகலா அணியில் இருந்து தப்பித்து வந்து பன்னீர்செல்வம் அணியில் இணைந்த மதுரையை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் பேசும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பேசும் சரவணன், 'சசிகலா அணியில் இணைவதற்காக 6 கோடி ரூபாய் வரை தருவதாக கூறினர். குறிப்பாக, தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி போன்ற கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்குத்தான் அதிகளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது." என்று கூறியுள்ளார்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் இணைவதற்காக ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ஒரு கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், சசிகலா அணி தரப்பில் ரூ. 2 கோடி மற்றும் தங்கம் ஆகியவை வழங்குவதாக பேரம் பேசப்பட்டதாகவும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
விகடன்
Monday, June 12, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment