கலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்களை தடை செய்யும் அதிகாரம் தன்னிடம் இல்லையென்று பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் ஆவின் புதிய பால் பொருட்களான ரசகுல்லா, பாக்கெட் தயிர் விற்பனையை அவர் நேற்று புதன்கிழமை துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “கலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்கள் மீது சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினரே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆவின் பால் பொருட்களில் எந்த கலப்படமும் இல்லை. ஆவின் தயிர் மிகவும் சுத்தமானது. ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை சென்னை முழுவதும் இல்லம் தேடி வரும் ஆவின் திட்டம் மூலம் கொண்டு சேர்ப்போம். தற்போது ஆவின் ரசகுல்லாவை இல்லம் தேடி வரும் ஆவின் திட்டம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறோம்.
எல்லா பால் நிறுவனங்களும் கலப்படம் செய்கிறது என்று நாம் கூறவில்லை. ஆனால், கலப்படம் செய்யும் நிறுவனங்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு.” என்றுள்ளார்.
கலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்களை தடை செய்ய நீங்கள் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், “கலப்பட பாலை விற்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தம்மிடம் இருந்திருந்தால் நேற்று மதியமே நடவடிக்கை எடுத்திருப்பேன். தனியார் பால் நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்துவதால், தனியாரிடம் நாம் பணம் வாங்கியதாக அர்த்தம் கொள்ள கூடாது.” என்றுள்ளார்.
Home
»
Tamizhagam
»
கலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அதிகாரம் என்னிடம் இல்லை: ராஜேந்திர பாலாஜி
Thursday, June 29, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment