பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இராணுவத் தளங்களை அதிகரிப்பதன் மூலம் உலகளாவிய ரீதியில் தனது இராணுவத்தை விரிவாக்க சீனா முயற்சி செய்கின்றது என அமெரிக்காவின் வருடாந்த பாதுகாப்புத் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை இதனைத் திட்டவட்டமாக சீனா மறுத்துள்ளது. பெண்டகனின் அறிக்கைப் படி சீனாவின் சராசரி பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு $140 பில்லியன் டாலர்களாக இருக்கும் பட்சத்தில் கடந்த வருடத்தில் மாத்திரம் இராணுவத்துக்காக அந்நாடு $180 பில்லியன் டாலர் ஒதுக்கி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது உலக அளவில் ஒரு நாடு இராணுவத்துக்காக ஒரு வருடத்துக்கு ஒதுக்கிய மிக அதிகபட்ச தொகையாகும்.
இந்நிலையில் தான் சீனா தனது இராணுவப் பாசறைகளைத் தெற்காசிய நாடுகளில் விரிவு படுத்த இராஜதந்திர ரீதியில் முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டை சீன வெளியுறவுத் துறை பேச்சாளர் ஹுவா சுன்யிங் முழுவதுமாக மறுத்துள்ளார். மேலும் பாகிஸ்தானுடனான உறவு நட்பு அடிப்படையிலானதே என்றும் அமெரிக்காவின் பேச்சு ஒரு பொறுப்பற்ற தலையீடு என்றும் சாடியுள்ளார்.
வடமேற்கு சீனாவை அரபுக் கடலுடன் இணைக்கும் ஒரே சீன ஒரே இணைப்புக் கொள்கை (One belt policy) இனது ஒரு பகுதியாக பாகிஸ்தானும் சீனாவும் தமது பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான உறவு இது என்றும் ஹுவா தெரிவித்துள்ளார்.
Home
»
World News
»
உலகளாவிய ரீதியில் இராணுவத் தளங்களை அதிகரிக்க சீனா முயல்கின்றது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு
Wednesday, June 7, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment