தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்கிற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கை குழப்புவதற்கு மக்களால் நிராகரிக்கப்பட்ட சில அரசியல் கோமாளிகள் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமது அரசியல் நிலைப்புக்காக தொடர்ச்சியாக குழப்பம் இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். இவ்வாறானவர்களின் செயற்பாடுகளுக்கு இடமளிக்காது அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற காணாமற்போனோர் தனிப்பணியகம் குறித்த திருத்தச்சட்டமூல விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கத்தின் செயற்பாடுகளில் காணப்படும் கால தாமதங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் கொடுப்பதில்லையென்ற நிலைப்பாடு எமது சமூகத்தின் ஒரு பகுதியில் காணப்படுகிறது. மக்களால் நிராகரிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்பினர் இதற்கான பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 2010ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தனர். 2015ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தனர். இனி நடக்கப் போகும் தேர்தலிலும் அவர்கள் நிச்சயம் தோல்வியடைவார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்போக்கான கட்சியாகும். இதனைக் கூறுவதில் நான் பெருமையடைகிறேன். சகல மக்களும் ஒன்றாக சம அந்தஸ்துடனும், நீதியான சூழலிலும் வாழ வேண்டும் எனவே நாம் விரும்புகின்றோம். எனினும், மக்கள் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என எமது பிரதேசங்களில் உள்ள சில அரசியல் கோமாளிகள் விரும்புகின்றனர்.” என்றுள்ளார்.
Thursday, June 22, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment