Monday, June 5, 2017

கபாலி படத்தின் போது விமர்சனத்துக்குள்ளான எந்த விஷயத்தையும் ‘காலா’ படத்தில் சேர்ப்பதில்லை என்கிற உறுதியான முடிவுக்கு வந்திருக்கிறார் பா.ரஞ்சித்.

முக்கியமாக இவர் பின்னாலேயே ஒரு கூட்டம் திரியும். அவர்களை கம்பெனி ஆர்ட்டிஸ்ட் போல தன் படத்தில் பயன்படுத்திக் கொண்டேயிருந்தார்.

இந்த முறை அவர்கள் அத்தனைபேருக்கும் ‘அவுட்’ சொல்லியிருப்பதுதான் ஆச்சர்யம். கடந்த முறை, ரஜினி கால்ஷீட் கிடைத்த ஒரு மாதத்திற்குள் ஷுட்டிங் கிளம்பியதால், திரைக்கதையில் படு சொதப்பல் நடந்ததல்லவா? இந்த முறை அதற்கும் வாய்ப்பில்லை என்கிறது சினிமா வட்டாரம்.

கதையை இழைத்து இழைத்து செதுக்கிய பின்பு முழு திருப்தி ஏற்பட்ட பின்புதான் ஷுட்டிங்கே கிளம்பியிருக்கிறார்.

எப்படி மெட்ராஸ் படம் பார்த்ததும் மக்கள் வியந்தார்களோ, அப்படியொரு வியப்பு இப்படத்தில் அமையும் என்கிறது முன் தகவல்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer