ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நாவன்லி அண்மையில் கைது செய்யப் பட்டு 30 நாட்களாக சிறை வாசம் அனுபவித்து வருகின்றார். இவரை விடுவிக்குமாறு கோரி இவருக்கு ஆதரவாக ரஷ்யாவில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் நாடு முழுவதும் இருந்து பங்கேற்ற சுமார் 1500 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
எதிர்வரும் வருடம் ரஷ்ய அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடவுள்ள நாவன்லி அவ்வப்போது பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வந்தார். 41 வயதாகும் நாவன்லி அரசினால் அங்கீகரிக்கப் படாத போராட்டங்களை ஏற்பாடு செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப் பட்டதாக அவரது செய்தித் தொடர்பாளர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் நாவன்லியின் கைதினை எதிர்த்து நாடு முழுதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது தலைநகர் மாஸ்கோவில் மாத்திரம் 823 பேர் கைது செய்யப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Home
»
World News
»
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நாவன்லி கைது எதிரொலி! : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக் கணக்கானவர்கள் கைது
Wednesday, June 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment