Friday, June 9, 2017

அழகு என்ற வார்த்தை பெண்களுக்கு பொருத்தமானது. நடை அழகு, ஆடை அழகு, கண் அழகு, கூந்தல் அழகு என்று அடுக்கி கொண்டே போகலாம்.

பேஷன் துறையில் பல்வேறு பெண்கள் கலந்துகொண்டு அழகிகள் பட்டியலில் இடம்பெற்றாலும், தமிழ் பெண்களுக்கு என்றே ஒரு தனி அழகு உண்டு.

கலாசாரத்தை பின்பற்றுவதில் குறிக்கோளாக இருக்கும் தமிழ் பெண்கள், தங்கள் அழகினை பேணிக்காப்பதில் அதிகமாக இயற்கை முறையினையே பின்பற்றுவார்கள்.

முகத்திற்கு வேதிப்பொருட்கள் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவதை விட, பயத்தம் மாவு, கடலை மாவு, மஞ்சள் போன்றவற்றினை பயன்படுத்துகிறார்கள்.

இதனால், தமிழ் பெண்களின் சருமம் பொலிவாக இருக்கிறது. கூந்தலுக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் தான் அவர்களின் கூந்தல் நீளமாகவும், நல்ல அடர்த்தியாகவும் இருக்கிறது.

ஆடைகள் விடயத்தில் இவர்களின் அதிகமான தேர்வு சேலை, தாவணி, சுடிதார் போன்றவையே. தங்கள் உடல்வாகுக்கு ஏற்றவாறும், தங்கள் நிறத்திற்கு ஏற்றவாறும் இவர்கள் ஆடை அணிவதால் இவர்களின் அழகு சற்று அதிகரிக்கிறது.

உணவு விடயத்தில் அதிகம் கொழுப்பு கலந்த உணவுகளை எடுத்துக்கொள்ளாத காரணத்தினால், உடல் எடையும் கனகச்சிதமாக இருக்கிறது. மேலும் அதிக எண்ணெய் உணவுகளை இவர்கள் சாப்பிடாத காரணத்தால் முகத்தில் பருக்கள் ஏற்படுவதில்லை.

அப்படி பருக்கள் இருந்தாலும், சோற்றுகற்றாழை, சந்தனம் போன்ற இயற்கை முறையினையே பின்பற்றுகின்றனர்.

கை மற்றும் கால்களை அலங்கரிக்க மருதாணியை அதிகமாக பயன்படுத்தும் இவர்கள், தலைக்கும் மருதாணி வைத்து குளிக்கிறார்கள். இதனால் இளநரை மறைவதுடன், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer