அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்தநாள் பரிசாக வெளியாகியுள்ளது. இந்நிலையில், இதுவரை போஸ்டரில் ‘இளைய தளபதி விஜய்’ என வழங்கப்பட்ட பெயர் தற்போது மெர்சல் போஸ்டரில் ‘தளபதி விஜய்’ என மாறியுள்ளது. சமீபகாலமாக, ரஜினியை தொடர்ந்து விஜயும் அரசியலுக்கு வருவதாக செய்திகள் அடிபட்டு வருகிறது.
இந்நிலையில்தான் விஜய்க்கு ‘தளபதி’ என்ற பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. அவரது ரசிகர்களுக்கு விஜய் அளிக்கும் பரிசாக கருதப்படுவதால், அவர்கள் மிகவும் குஷியாகியுள்ளார்கள். மேலும், இந்த ‘தளபதி’ பட்டம், அரசியல் ரீதியாகவும் விஜய்க்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஏற்கனவே ஒரு தளபதி இருக்கும் நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள இந்த தளபதி பட்டம் என்ன தாக்கத்தை உருவாக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...
Home
»
Cinema News
»
தளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா? அரசியலுக்கு வாறது உண்மைதான்!
Friday, June 23, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment