வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சியொன்றின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதி இன்னமும் முதலமைச்சரிடமோ அல்லது அவரது ஆலோசகரிடமோ கையளிக்கப்படவில்லை என்று கனடிய தமிழர் சமூக அமையம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் ஜனவரி மாதம் கனடாவில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சியின் மூலம் சேகரிக்கப்பட்ட 50,000 டொலர்கள், முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டதாகவும், அந்த நிதி எவ்வாறு கையாளப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்களை முதலமைச்சர் இன்னும் வழங்கவில்லை என்றும் கடந்த சில நாட்களாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.
இந்த நிலையில், குறித்த நிகழ்வினை நடத்திய கனடிய தமிழர் சமூக அமையம், நிதி இன்னமும் முதலமைச்சரிடம் கையளிக்கப்படவில்லை என்று மறுத்துரைத்துள்ளது. அதற்கான காரணங்களையும் அது வெளியிட்டுள்ளது.
Home
»
Sri Lanka
»
சேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்படவில்லை: கனடிய தமிழர் சமூக அமையம்
Saturday, June 24, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment