வடக்கு மாகாண அமைச்சர்கள் நால்வரையும் பதவி நீக்குவது தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையின் மீது நாளை புதன்கிழமை மாகாண சபையில் விசேட அமர்வு நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் ஏமாற்றமளிப்பதாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நேற்று திங்கட்கிழமை வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
Wednesday, June 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment