கொழும்பு உள்ளிட்ட பெருநகரங்களில் சேரும் குப்பைகளை புத்தளம் பகுதிக்கு கொண்டு சென்று கொட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் முதல் அமுலுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் அருக்காவிழு எனும் பகுதியில் சிமெண்ட் உற்பத்திக்காக பயன்படுத்தும் மூலப் பொருட்களை தோண்டியெடுப்பதன் காரணமாக அப்பகுதியில் பாரிய குழிகள் உருவாகியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், கொழும்பில் அகற்றப்படும் குப்பைகளை அந்த குழிகளுக்குள் கொட்ட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
கொழும்பில் இருந்து குப்பைகளை ரயில் மூலம் புத்தளம் பகுதிக்குக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், நாளொன்றுக்கு ரயில் மூலம் 1200 தொன் குப்பை அங்கு கொண்டுசெல்ல முடியுமென்று தெரிவித்துள்ளார்.
Tuesday, June 27, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment