சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. உளவுத்துறை, ஜனனம் போன்ற படங்களை இயக்கிய எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்குகிறார்.
நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் சுவாதி கொல்லப்பட்ட நிகழ்வின் உண்மைகளைதான் சொல்லப் போகிறதாம் இப்படம்.
“இந்த தலைப்புக்காகவே படம் ஓடும்” என்று வாழ்த்தினார் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்.
“செல்வ குடும்பத்தில் பிறந்த ரமேஷ் செல்வன், தன் ஒவ்வொரு படத்திற்காகவும் ஒவ்வொரு வீட்டை விற்றிருக்கிறார்” என்று குறிப்பிட்டார் ஆர்.கே.செல்வமணி.
இறுதியாக பேச வந்த விஷால், “இனி அப்படியொரு துயரம் நடக்காது.
ரிலீஸ் தேதியை முடிவு பண்ணிட்டு ஒரு மாதத்திற்கு முன்பே சங்கத்துக்கு வந்திருங்க. படத்தை நாங்க ரிலீஸ் பண்ணித் தர்றோம்.
எத்தனை வீடுகளை இழந்தீங்களோ, அத்தனையும் திரும்ப கிடைக்கும்” என்றார்.
ஜனங்களின் வாயை அடைப்பதற்காகவே தந்திரமாக இந்த வழக்கை குளோஸ் பண்ணிய தந்திர அரசியல், இப்படத்திற்கு என்ன முடிவை எடுத்து வைத்திருக்கிறதோ?
அது புரியாம ஆளாளுக்கு சாமரம் வீசுறீங்களேப்பா...?
Tuesday, June 6, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment