உச்சக்கட்ட எரிச்சலில் இருக்கிறது விஜய்யை வைத்து படம் தயாரித்து வரும் அக்கம்பெனி. ஏன்? அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் இன்னும் பெயர் வைக்காதப் படத்தின் பட்ஜெட், ராக்கெட் வேகத்தில் மேலேறி போய் கொண்டேயிருக்கிறது.
அதுவும் தனது சம்பளமாக பதினைந்து கோடி வரைக்கும் பெற்றுக் கொண்ட அட்லீ, சிக்கன விஷயத்தில் சிறு புள்ளியளவுக்கு கூட அலட்டிக் கொள்வதில்லை என்பதுதான் ஐயோ.
கூட்டிக் கழித்து பார்த்தால், இதுவரை ஆன செலவே 120 கோடியை தாண்டி விட்டதாம்.
மனக்கணக்கிலிருந்து சுமார் நாற்பது கோடியாவது இது எக்ஸ்ட்ரா என்கிறது கம்பெனி தரப்பு.
கைமீறி போன காளை மாட்டை கயிறு கட்டியும் இழுக்க முடியாத நிலைமை நீடிப்பதால், படம் ரீலிசுக்கு முன் அட்லீ சம்பளத்திலோ, விஜய் சம்பளத்திலோ சிறிய அளவு கை வைக்கும் கசமுசா படலம் அரங்கேறுமாம்.
கலகம் ஸ்டார்ட்!
Thursday, June 1, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment