விஜய் சேதுபதி தயாரித்து வெளிவர இருக்கும் படம் "மேற்குத் தொடர்ச்சி மலை". மேற்கு தொடர்ச்சி மலை படம் வெளியாவதற்கு முன்பே பல சர்வதேச விருதுகளும், தேசிய விருதுகளும் பெற்றுள்ளது. இதைப்பற்றி படத்தின் இயக்குனர் லெனின் பாரதி கூறுகையில், "மேற்குத் தொடர்ச்சி மலை" படத்திற்காக இரண்டு வருடங்கள் தேனியில் ஒரு வீடு எடுத்து தங்கி படப்பிடிப்பிற்கான வேலைகளை செய்தோம்.
படத்தின் நாயகன் 'ஆண்டனி' ஒரு வருடம் மலை ஏறி இறங்கி அங்கு வேலை பார்க்கும் நபர்களுடன் சென்று தினக்கூலி வாங்கி வருவார். நாயகி 'காயத்ரி கிருஷ்ணா' ஒரு மாதம் ஏலக்கா தோட்டத்தில் அவர் யார் என்று சொல்லாமல் தெரிந்த நண்பனுடைய தங்கை என்று சொல்லி வேலைக்கு சேர்த்துவிட்டோம். அப்பொழுதுதான் உடல் மெலிய அங்கு வேலை பார்க்கும் மக்களுடைய வாழ்வு தெரியும் அதைப் பார்த்து இயல்பாக நடிக்க முடியும் என்று இயக்குனர் குறிப்பிட்டார்.
மேலும் படத்தின் இயக்குனர் கூறுகையில் இந்த படத்தில் நடித்திருக்கும் முக்கிய கதாபாத்திரங்கள் அங்குள்ள மக்களை வைத்துதான் நடிக்க வைத்தோம்.இந்த படத்தில் மேற்குத் தொடர்ச்சி அடிவாரத்தில் மற்றும் மலை மேல் வாழும் சாமான்ய மக்களுடைய படம். அவர்களுடைய சின்னச் சின்ன கனவுகள், ஆசைகள், போராட்டங்கள் அதற்கிடையே நிகழ்ந்து கொண்டிருக்கிற மிகப்பெரிய அரசியலை எங்களால் முடிந்த அளவு மிக நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறோம். இப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்தது மனதிற்கு நெகிழ்வாக இருக்கிறது என்று இயக்குனர் குறிப்பிட்டார்.
Wednesday, June 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment