“அமீர்கான் நடித்த தங்கல் திரைப்படம் பார்த்தேன். எனக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது.” என்று சீன அதிபர் ஜி ஜிங்பிங், பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்துள்ளார்.
தங்கல் திரைப்படம் சீனாவிலும் வெளியாகி 1,100 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. அதனை, அந்நாட்டு அதிபரும் பார்த்துள்ளார்.
இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் நடைபெற்று வருகிறது. அந்த மாநாட்டில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டுள்ளார்.
குறித்த மாநாட்டுக்கு வருகை தந்திருந்த சீன அதிபருக்கும், பிரதமர் மோடிக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. அதன்போதே சீன அதிபர் தங்கல் படம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
Saturday, June 10, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment