“இலங்கை இன்று சர்வதேச போதைப் பொருள் கடத்தலில் மத்திய நிலையமாக மாறியுள்ளது. நாட்டில் போதைப் பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த நாட்களில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தம், அரசியல் பிரச்சினை மற்றும் வேலைநிறுத்தம் காரணமாக போதைப் பொருள் தொடர்பான பிரச்சினையை சமூகமும் ஊடகமும் மறந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்புத் தினத்தை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “போதைப் பொருள் பாவனை மற்றும் எடுத்துச் செல்வதைத் தடுப்பது தொடர்பான சட்டத்தை வலுவூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக அபாயகர ஒளடத கட்டுப்பாட்டுத் தேசிய சபையின் சட்டம் மறுசிரமைக்கப்பட வேண்டும்.
இலங்கை இன்று சர்வதேச போதைப் பொருள் கடத்தலில் மத்திய நிலையமாக காணப்படுகிறது. நாட்டின் போதைப் பொருள் பாவனையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொலிஸாரால் அமைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவும் மறுசீரமைக்கப்படும்.
போதைப் பொருள் பாவனை மற்றும் விநியோகம் தொடர்பான பிரச்சினையை நாடு எதிர்கொண்டிருக்கும் பாரிய சவாலாகும். எதிர்வரும் 2 வருட காலப்பகுதியில் நாட்டில் போதைப் பொருள் பாவனை மற்றும் கடத்தலைத் தடுப்பதே இதன் முக்கிய இலக்காகும்.” என்றுள்ளார்.
Friday, June 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment