Friday, June 30, 2017

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே அக்குள் பகுதியின் கருமையை எளிதாக போக்கலாம்.

பேக்கிங் சோடா மற்றும் வினிகர்

பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கலந்து அக்குள்களில் தடவி 15 நிமிடங்களுக்கு பின்னர், குளிர்ந்த நீர் கொண்டு நன்றாக துடைத்து எடுக்க வேண்டும். கிழமைக்கு 2 தடவை இதனைச் செய்து வந்தால் நல்ல பயன் பெறலாம்.

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை

அரை எலுமிச்சை சாறு சேர்த்து பேக்கிங் சோடாவுடன் ஒரு பேஸ்ட் செய்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை 10 நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்யவும்.

அது உலர்ந்த பின் அதைனை நீரினால் துடைத்து எடுக்க வேண்டும். தினமும் இரண்டு முறை செய்து வந்தால் வியர்வை துர்நாற்றம் இல்லாமல் இருப்பதுடன் கருமையும் மறையும்.

பேக்கிங் சோடா மற்றும் பால்

பேக்கிங் சோடா மற்றும் பால் ஒரு தேக்கரண்டி கலந்து அக்குள்களில் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு, மெல்லமாக மசாஜ் சுழற்சியில் மசாஜ் செய்யவும். குளிர்ந்த நீர் கொண்டு நன்றாக துடைத்து எடுக்க வேண்டும்.

பேக்கிங் சோடா எலுமிச்சை மற்றும் வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் சாறு 3 தேக்கரண்டியுடன் பேக்கிங் சோடா கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் நல்ல பலனை காணலாம்.

இது இறந்த செல்களை அழிக்கிறது, கைகளில் உள்ள கருமையை போக்கி மென்மையாக்குவதற்கு இந்த முறையை தொடர்ச்சியாக செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பேக்கிங் சோடாவை பயன்படுத்துவதால் எற்படும் நன்மைகள்

பேக்கிங் சோடா அக்குள் பகுதியில் வியர்வையை உறிஞ்சும் மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

சருமத்தின் கார்பன் தன்மையை சீராக்க உதவுகிறது, அது தோல் pH நிலைகளை சமப்படுத்துகிறது.

தோல்களிலுள்ள இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது.

மெலனின் உற்பத்தியை குறைக்க உதவுகிறது, இது தோலின் நிறமாற்றத்தின் முக்கிய காரணம் ஆகும்.

தோலில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி தோலை பாதுகாக்கின்றது.

உடலில் ஏற்படும் மோசமான வாசனையை மாற்றி தோல்களை ஆரோக்கியமாய் வைக்க உதவ முடியும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer