வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை வடக்கு மாகாண சபையில் நாளை புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
குறித்த விசாரணை அறிக்கை தொடர்பில் ஆராயும் விசேட அமர்வு நாளை நடைபெறும் என்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இன்றைய (செவ்வாய்க்கிழமை) அமர்வின் ஆரம்பத்தில் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை கடந்த மே 19ஆம் திகதி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
அதில், கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோர் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்றும், அவர்கள் இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.
Tuesday, June 6, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment