Friday, June 23, 2017

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவரவிருக்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் ஜூன் 22 விஜயின் பிறந்தநாள் அன்று வெளியாவதாக இருந்தது. அதன்பிறகு ஜூன் 21 மாலையே வெளியாகும் என்று அறிவிப்பு வந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

தற்போது அட்லீ-விஜய் படத்தின் முதல் பார்வை வெளிவந்தது. படத்திற்கு மெர்சல் என பெயர்சூட்டப்பட்டுள்ளது. முதல் பார்வை போஸ்டரில் விஜய் மாடுபிடி வீரராக, மிகுந்த புன்னகையோடு இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. விஜய்யின் பின்னால் பல காளை மாடுகளும் ஓடிவருகின்ற, முறுக்கு மீசை வைத்துக்கொண்டு நடுநிலை வயது உடையவராக இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் படத்தின் பெயர் மெர்சலை காளைமாடு போல் வடிவமைத்திருக்கின்றனர். ரசிகர்கள் விஜய்க்கு வைத்த பட்டம் இளையதளபதி. ஆனால், இப்போது வெளிவந்த மெர்சல் போஸ்டரில் வெறும் தளபதி விஜய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மிகவும் கவனிக்கக்  கூடிய ஒன்றாக இருக்கிறது. அண்மையில் ஜல்லிக்கட்டுக்காக மாபெரும் அறப்போராட்டம் நடைபெற்றது அனைவரும் அறிந்ததே. ஜல்லிக்கட்டுக்காக விஜய் ஆதரவு குரல் கொடுத்ததும், மெரீனா போராட்டத்தில் அவர் கலந்துகொண்டதும் அண்மையில் வெளியான மெர்சல் போஸ்டர்  மீண்டும் அந்நிகழ்வை ரசிகர்களுக்கு  நினைவூட்டுகின்றன.

மெர்சல் படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒன்றுதான் இப்போது வெளிவந்த மாடுபிடி வீரரான கட்டப்பஞ்சாயத்துகாரர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer