நாட்டினை இரண்டாக துண்டாடும் வகையிலான புதிய அரசியலமைப்பினை அறிமுகப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களில் நல்லாட்சி அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். குருணாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு உரித்தான விடயங்களில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தவும் நல்லாட்சிக்காரர்கள் முயற்சித்து வருகின்றனர்.
சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என அரசாங்கம் கூறினாலும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சர்வதேச நீதிபதிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்திருப்பதாக எம்.சு.சுமந்திரன் கூறியுள்ளார்.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
நாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல்லாட்சி அரசாங்கம் தீர்மானம்: மஹிந்த
Wednesday, June 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment