ஜேர்மனியின் பவேரியா மாகாணத் தலைநகர் மூனிச்சில் உள்ள புறநகர் ரயில் நிலையம் ஒன்றின் அருகே இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு பெண் போலிசார் உட்பட 4 பேருக்குப் படுகாயம் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. குறித்த ரயில்வே நிலையத்தின் சுரங்கப் பாதையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
மேலும் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட மர்ம நபர் மீது போலிசார் மேற்கொண்ட பதில் தாக்குதலில் காயம் அடைந்த நிலையில் அந்நபர் போலிசாரிடம் பிடிபட்டுள்ளார். இது ஒரு தீவிரவாத சம்பவமாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ள போலிசார் குறித்த நபரிடம் விசாரணை நடத்தப் பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த ரயில் நிலையப் பகுதியில் நிலமை வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இத்தாக்குதல் நிச்சயம் ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்ற சந்தேகத்தின் பேரில் பொது மக்கள் அச்சமடைந்ததால் மூனிச் நகரிலுள்ள பொது மக்கள் மத்தியில் பல மணி நேரங்களுக்குப் பதற்றம் நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.
Wednesday, June 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment