Thursday, June 1, 2017

தற்போது சமந்தாவுடன் அநீதிக்கதைகள் படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அதைத்தொடர்ந்து த்ரிஷாவுடன் 96, சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் போன்ற படங்களில் அவர் நடிக்க இருக்கிறார். இயக்குனர் பி வாசுவின் மகனும், நடிகருமான சக்தி வாசு "7 நாட்கள்"  என்ற படத்தில் நடித்திருக்கிறார் .அந்தப்  படம் ஜூன் 2 ஆம் தேதி அன்று வெளிவர இருக்கிறது.

அண்மையில் நடந்த "7 நாட்கள்"  படத்தின் பத்திரிகையாளர்  சந்திப்பில் நடிகர் சக்தி வாசு, ஒரு நடிகர் என மட்டுமல்லாமல், திரைப்பட இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் கால்பதிக்க விரும்புகிறேன் என்றும், அப்படத்தில் விஜய் சேதுபதியை வைத்து இயக்குவேன் என்றும் தெரிவித்தார்.

விஜய் சேதுபதிக்காக கதை எழுதிக்  கொண்டிருப்பதாகவும், அவர் ஒரு பன்முக நடிகர் எனவும்  புகழாரம் சூட்டிக் குறிப்பிட்டார் சக்தி வாசு.

0 comments :

Post a Comment

 
Toggle Footer