Tuesday, June 6, 2017

‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ என்ற குறும்படத்தின் இயக்குனர் மற்றும் நாளைய இயக்குனர் பாகம்-3 இன் வெற்றியாளர் நித்திலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, விதார்த் நடித்து வெளிவர இருக்கும் படம்தான் குரங்கு பொம்மை. அண்மையில் குரங்கு பொம்மை படத்தின் இசை வெளியீட்டு விழாவும், பத்திரிகையாளர் சந்திப்பும் நடைப்பெற்றது.

படத்தைப் பற்றி நடிகர் விதார்த் கூறுகையில் குரங்கு பொம்மை படத்தில் தான்  ஒரு  கால் டாக்சி டிரைவராக வருவதாகவும், அவருடைய அப்பாவாக நடிக்கும் பாரதிராஜா, மரக்கடையில் வேலை செய்யும் ஊழியராக வருகிறார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் குரங்கு பொம்மை படத்தில் இயக்குனர் ஒரு புதிய திரைக்கதையை அமைத்திருப்பதாகவும், வித்தியாசமான முறையில் அவர் அதைக் கையாண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார் விதார்த்.

விதார்த்திடம் எப்படி கதைகளை தேர்வு செய்கிறீர்கள்? என்று கேட்டபோது, அதற்கு நல்ல இயக்குனர்கள் என் கண்ணில் தென்படுகிறார்கள், அதுமட்டும் இல்லாமல் வித்தியாசமான கதைகளைப் பார்க்க மக்களும் ஆர்வமாக இருக்கிறார்கள் எனக்  கூறினார். மேலும், படத்தின் ஹீரோ யார் என்பதைத்  தாண்டி படத்தின் கதைதான் முதல் ஹீரோ என்பதை நம்புகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது, சுரேஷ் சங்கையா இயக்கத்தில் விதார்த் நடித்து வெளிவந்திருக்கும் படம் "ஒரு கிடாயின் கருணை மனு" , திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer