பௌத்த மதத்தைக் காப்பாற்றுவதற்காக புறப்பட்டதாக சொல்லிக் கொள்ளும் பொது பல சேனா அமைப்பு, சிறுபான்மை இனத்தவர்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட செயற்பாடுகளுக்காக பாதாள உலகக் குழுக்களினை இணைத்துக் கொண்டுள்ளதாக நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நுகேகொட பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவரது வியாபார நிறுவனத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரசியல் ரீதியான எவ்வித தொடர்புகளும் அவருக்கு இல்லை. அவர் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர். அத்தோடு, தீ வைப்பது, வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையிடுவது உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு நன்கு தேர்ச்சிபெற்றவராவார். ஆனால் இவர் பொது பல சேனாவுடன் நீண்ட காலமாக தொடர்பில் இருந்துள்ளதோடு, அந்த அமைப்பின் கூலிப்படையாகவும் செயற்பட்டுள்ளார். அதன்போது ஞானசார தேரருக்கும் அவருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டுள்ளது.
இதிலிருந்து ஒன்று தெளிவாக தெரிகின்றது. பொது பல சேனா அமைப்பானது மதம் தொடர்பில் அதிகமாக சிந்திக்கும் ஒரு அமைப்பென சில பிக்குகளையும் சேர்த்து வைத்துக்கொண்டு, மறுபுறத்தில் இவ்வாறான பாதாள உலகக் கூலிப்படைகளைக் கொண்டே தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
பொது பல சேனா பாதாள உலகக் குழுக்களை இணைந்துக் கொண்டு செயற்படுகின்றது: விக்ரமபாகு கருணாரத்ன
Wednesday, June 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment