குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை எதிர்த்து சட்டமேதை அம்பேத்கரின் பேரனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிரகாஷ் அம்பேத்கரை நிறுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கான முன்மொழிவை இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் விடுத்துள்ளன.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைவதால், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், ஜூலை 17இல் நடக்க உள்ளது.
இந்தத் தேர்தலில், பீஹார் கவர்னராக இருந்த ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக நிறுத்துவதாக பா.ஜ.க, அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் குறித்து முடிவு செய்வதற்கு, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இன்று ஆலோசனை நடத்த உள்ளன.
இந்நிலையில், பிரகாஷ் அம்பேத்கரை, எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என, இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
Home
»
India
»
குடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எதிராக அம்பேத்கரின் பேரனை நிறுத்த எதிர்க்கட்சிகள் தீவிரம்!
Thursday, June 22, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment