ஒரு முட்டையில் சராசரியாக 7 கிராம் புரதம், 5 கிராம் கொழுப்பு, 75 கலோரிகள், 185 மில்லிகிராம் கொலஸ்ட்ரால், 70 மில்லிகிராம் சோடியம், 67 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளன.
இவை தவிர, விட்டமின் ஏ, டி, பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை அடங்கியுள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் லுடீன் (Lutein), சியாக்சன்தீன் (Zeaxanthin) ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
உடலுக்குத் தேவையான ஏழு அமினோ அமிலங்களும் முட்டையில் மட்டுமே நிறைவாக இருக்கின்றன.
எனவே, முட்டையை அவித்தோ, மிளகு சேர்த்த ஆம்லேட்டாகவோ, வயதைக் கருத்தில் கொண்டு பச்சையாகவோ தேவைக்கேற்ப சாப்பிடுவோம்.
முட்டையை வேகவைப்பதால், அதிலுள்ள உடலுக்குத் தேவையான செலினியம், ரிபோஃபிளேவின் உள்ளிட்ட சத்துக்கள் குறைந்துவிடும், எனவே, அரைவேக்காடான முட்டைகள் சாப்பிடலாம் என நினைப்பது தவறு.
அரைவேக்காடான, முட்டை முழுமையாக வேகாததால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் முழுமையாக அழிக்கப்பட்டிருக்காது.
இது குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோருக்கு உகந்ததல்ல. வேகவைக்கும்போது, சத்துக்களின் அளவு குறைந்தாலும், நோய்ப் பாதுகாப்பு மிகவும் முக்கியம்.
பச்சை முட்டையில் கிடைக்கும் சத்துக்களை முழுமையாகப் பெற சிறந்த வழி, வேகவைத்த முட்டையின் வெள்ளைக்கருவை அதிகமாகச் சாப்பிடுதல்.
மஞ்சள்கருவில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால், இதய நோயாளிகள், உடல்பருமனானவர்கள் தவிர்ப்பது நல்லது.
இருபதாயிரம் முட்டைகளில் ஒரு முட்டையில் Salmonella Bacteria இருக்க வாய்ப்புள்ளது. இந்த Bacteria உள்ள முட்டையைச் சாப்பிட்டால் வாந்தி, உடலில் நீர் வறட்சி, கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படும்.
ஏழு நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும்.
Salmonella Bacteria தாக்குதல் தீவிரமடைந்து அமெரிக்காவில், வருடத்துக்கு சராசரியாக 360 பேர் மரணமடைகின்றனர்.
பச்சை முட்டை சாப்பிடுவதால் பரவும் இந்தக் காய்ச்சலால், எதிர்ப்பு சக்தி குறைந்த முதியோர்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகிறார்கள். எனவே, பச்சை முட்டையை, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
Friday, June 9, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment